இங்கு சொடுக்கவும் தகவல்

எங்கள் தேசம்

எல்லோருக்குமான தேசம்

ஜனவரி 2019

கடந்த ஆண்டு 2016 நவம்பர் முதல் எங்கள் தேசம் நிகழ்வுகள் தமிழகத்தில் பல்வேறு வடிவங்களில் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்றுள்ளன. ஒரு வருடம் என்ற அளவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் முழுமை பெறாததால் அகில இந்திய அளவிலும் இந்நிகழ்வுகள் தொடர வேண்டிய தேவை இருப்பதால் 2019ல் இன்னும் சிறப்புடன் வீச்சுடன் எங்கள் தேசம் இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டும். எங்கள் தேசம் நிகழ்வின் பகுதிகளாக அறிவியல் தின உறுதிமொழி, ஆகஸ்ட் 20- அறிவியல் மனப்பான்மை தினம், “Ask Why” ஆகிய அகில இந்திய அளவிலான நிகழ்வுகள் சிறப்புடன் சென்றுள்ளது.

தேசம் தழுவிய இன்னுமொரு நிகழ்வு இப்பொழுது திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் உடன் பொது நிகழ்வாக இந்த நிகழ்வை கொண்டு செல்ல திட்டமிட வேண்டும். ஜனவரி 23  சுபாஸ் சந்திரபோஸ் பிறந்த தினம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 30 மகாத்மா காந்தி நினைவு தினம் ஆகிய தினங்களை நினைவு கூறும் விதமாக “Ask How” இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றும் மிக முக்கியமான கோசத்தை இந்நிகழ்வில் மிக வலிமையாகவும், பரவலாகவும் கொண்டு செல்ல திட்டமிட வேண்டும். ஜனவரி 23,26,30 ஆகிய தினங்களை அந்தந்த தினத்திற்குரிய சிறப்பம்சங்களோடு கொண்டு செல்ல வேண்டும்.

ஜனவரி 23 அன்றைய தினத்தில் பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றும் விசயங்களை முன்னிறுத்தும் நிகழ்வுகள் அமைத்திடலாம். குறிப்பாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கியமான நகரங்களில் ஒரு கருத்தரங்கை திட்டமிட வேண்டும். மாநிலம் முழுவதும் 50 கருத்தரங்குகள் நடத்தலாம். பொதுத்துறை தொழிற்சங்கங்கள் உடன் இணைந்து இந்நிகழ்ச்சியை திட்டமிடலாம். (LIC, BSNL, ரயில்வே, அஞ்சல் துறை, மத்திய மாநில அரசு தொழிற்சங்கங்கள்) குடியிருப்போர் சங்கங்கள், நல சங்கங்கள், முற்போக்கு அமைப்புகள், மகளிர் அமைப்புக்கள்  ஆகியவறையும் இணைத்துக் கொள்ளலாம். கருத்தரங்குடன் வேறு வடிவங்களையும் திட்டமிடலாம். அனைத்து மாவட்டங்களும் ஒரு நிகழ்ச்சியையாவது உறுதி செய்ய வேண்டும்.

ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த நிகழ்வுகளை திட்டமிடலாம். அரசியலமைப்பு பாதுகாப்பு, அரசிலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்தல் போன்ற அம்சங்களை முன்னிறுத்தும் நிகழ்வுகள் அமைக்கலாம். அரசியலமைப்பு பதாகைகளோடு ஊர்வலங்கள், சிறப்பு ஓட்டங்கள், சேர்ந்திசை நிகழ்வுகள், கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து பெரிய பேனர்கள் உருவாக்குதல், கையெழுத்து இயக்கங்கள், கடிதம் எழுதுதல், இந்திய வரைபடம் உருவாக்குதல் போன்ற நிகழ்வுகளை திட்டமிடலாம். மாவட்டத்தின் தன்மைக்கேற்ப திட்டமிடலாம். இன்னும் சிறப்பான நிகழ்வுகளையும் மாவட்டங்கள் உருவாக்கலாம்.

ஜனவரி 30 ஒற்றுமை, அகிம்சை, மதநல்லிணக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நிகழ்வுகளை திட்டமிடலாம். மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான போட்டிகள் நடத்திடலாம். மகாத்மாவின் அகிம்சை, மத நல்லிணக்கம், மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றைக் குறித்த உரையாடல்கள் நிகழ்த்தலாம்.

மேற்கண்ட நிகழ்வுகளுக்கான கருத்துத்தாள்கள் தயாராகிறது. மாவட்டங்கள் நாம் ஏற்கனவே அனுப்பிய எங்கள் தேசம் பவர்பாயிண்ட் மற்றும் போஸ்டர்களை இந்நிகழ்வுகளில் பயன்படுத்த வேண்டும். 10 செட் பவர்பாயிண்ட் மற்றும் போஸ்டர்கள் மின் அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. நாம் வெளியிட்ட எங்கள் தேசம் புத்தகங்கள் மற்றும் AIPSN வெளியிட்ட ஆங்கில புத்தகங்களும் கருத்துத்தாளாக பயன்படுத்தலாம்.

அன்புடன்

அ.அமலராஜன்                                எம்.எஸ்.முகமது பாதுசா

பொதுச்செயலர்                                மாநில ஒருங்கிணைப்பாளர்

எங்கள் தேசம்
எல்லோருக்குமான தேசம்
ஜனவரி 2019
பெறுநர்
திருமிகு. மாவட்டச் செயலர், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
அன்புடையீர்,
வணக்கம்.
எங்கள் தேசம் நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திட நமது மாநில செயற்குழுவில்  திட்டமிட்டுள்ளோம். 2019 ஜனவரி 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெற்ற இராமேஸ்வரம் செயற்குழுவில்திரு.ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் கருத்துரை ஜனவரி 23,26,30 தேதிகளை மையமாகக் கொண்டத்தாக இருந்தது. மாவட்டங்கள் இதில் தீவிர கவனம் கொள்ள வேண்டும். வரும் ஜனவரி 23,26,30 தேதிகளை மிகச்சிறப்பாக திட்டமிடுங்கள். உள்ளூர் கருத்தாளர்களை பயன்படுத்துங்கள்.
சிறிய, பெரிய அளவிலானாலும் கண்டிப்பாக      ஜனவரி 23-30 தேதிகளில் நிகழ்வுகளை நடத்தி அறிக்கைகளை அனுப்புங்கள். வாட்ஸப், முகநூல், மின் அஞ்சல் மற்றும் பல்வேறு வகையிலான வலைதளங்களை பயன்படுத்துங்கள்.  அனைத்து மாவட்டங்களும் திட்டமிட்டுள்ள  நிகழ்ச்சியை உறுதி செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்
அ.அமலராஜன் பொதுச்செயலர்
எம்.எஸ்.முகமது பாதுசா
மாநில ஒருங்கிணைப்பாளர்