கல்விக்கான தேர்தல் கோரிக்கைகள்

கல்விக்கான தேர்தல் கோரிக்கைகள்

பள்ளிக் கல்வி:  (School Educational Manifesto)

தேசிய அளவிலான கோரிக்கைகள்

  1. அரசியல் சாசனத்தின் கடப்பாட்டுக்குட்பட்டு கல்வி தொடர்பான அனைத்துக் கொள்கை முடிவுகளையும் மேற்கொள்வது
  2. கல்வி முறைமையில் அனைத்து சீர்திருத்தங்களையும் ஜனநாயகம், சமத்துவம் மற்றும் மதசார்பின்மையை அடிப்படையாகக் கொண்டுமேற்கொள்வது. சமூக நீதியும் சமவாய்ப்பும் தவிர்க்க இயலாத கூறுகள் என்பதை மனதில் கொள்வது.
  3. உலக அளவில் குழந்தைமை பருவமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 18 வயது வரை இலவசக் கட்டாயக் கல்வியை அளிக்கும் வண்ணம் கல்வி உரிமைச் சட்டத்தினை விரிவுசெய்தல் இதன் மூலம் முன்பருவக்கல்வி, பள்ளிக்கல்வி மேநிலைக்கல்வி போன்றவற்றை சட்டபூர்வ உரிமையாக்குதல்.
  4. கல்வி உரிமைச்சட்டத்தின் உட்கூறுகளாக உள்ள அனைத்தையும்   அதன் உண்மையான பொருளில் உள்வாங்குதல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதை  அரசின்  பொறுப்பாக்குதல்
  5. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ( தாழ்த்தப்பட்ட,மலைசாதி, பெண்கள் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் பேச வாய்ப்பு மறுக்கப்படும், மற்றும் சிறுபான்மை மக்கள்)  கல்வி அளிக்கும் கல்விக்கொள்கைகளை சரியான முறையில் கூராய்வு செய்து  சீர்திருத்தும் பணியை நேர்மையாக  நடைமுறைப்படுத்துதல்
  6. தலித் மற்றும் மலைவாழ் மக்கள், சிறுபான்மையின குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள் கல்வி பெறுவதில் உள்ள தடைகளை கண்டறிந்து அவற்றை  தொடர் கண்காணிப்பின் மூலம்  நனவாக்குவதற்கான நேர்மையான நடவடிக்கைகளை உறுதிசெய்தல்.
  7. பெண்கள், சமத்துவமின்மையை எதிர்கொண்டு தங்கள் சமூகத்தில் தமது  நிலையினை உயர்த்திக்கொள்வதற்கான தன்னம்பிக்கையினை வளர்த்துக்கொள்ளும் ஏற்றம் தருவதாக  கல்வி அமையவேண்டும்.
  8. குடும்ப நிறுவனங்களில் நேரும் குழந்தை உழைப்பை சட்டபூர்வமாக்கும் குழந்தை தொழிலாளர் சட்டம் ( தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்)  பிரிவு 3 ல் 2016 ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை நீக்குவதன் மூலமாக 18 வயது வரை குழந்தைகள் தொழிலாளாராவதை முற்றிலும் ஒழித்தல்.
  9. கல்வியில் சமத்துவமின்மையினை ஏற்படுத்தும் வசதிக்கேற்ற பல்வேறு பள்ளிய முறைகளை நிக்கி பொதுப்பள்ளிகளை உறுதிசெய்தல்.
  10. உலக அளவிலும், பல்வேறு தேசிய குழுக்களிலும், கோத்தாரிக் கல்விக்குழுவிலும் வரையறுக்கப்பட்டுள்ள தேசிய மொத்த வருமானத்தில் 6% கல்விக்கு செலவிடுவதை உறுதி செய்தல்.
  11.  குழந்தைகளின் கல்வி பெறும் உரிமையின் முதுகெலும்பாய் உள்ள கல்வி உரிமைச்சட்டத்தின் பிரிவு 16 ஐ மீளச்செய்தல். பள்ளிகளின் கட்டுமானம் உள்ளிட்ட கற்றல் சூழலை உறுதிசெய்தல். . இதனைவிடுத்து ஒட்டுமொத்த கல்விமுறைமையின் தோல்வியினை ஒரே அடியாக  குழந்தைகள் மேல் திணித்து பள்ளியை விட்டுத் துரத்தாதிருத்தல்.
  12.  கல்வி அளிக்கும் செயலில் லாப நட்டம் பாராது பள்ளிகளை மூடும் செயலை உடனடியாக நிறுத்துதல். கல்வி உரிமைச்சட்டம் 2009 க்கு  பிறகான காலத்தில் மூடப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட பள்ளிகளை மீண்டும் தனித்தனியாக செயல்படவைத்தல்.
  13. வகுப்புகளின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை நியமித்தல்.
  14. ஆசிரியர்களின் தொழில்சார் வளங்களை வளர்த்துக்கொள்ளும் விதமாக பயிற்சிகளை உறுதிசெய்தல்.
  15. ஒப்பந்த ஆசிரியர்களை நியமித்து சுரண்டும் போக்கை கைவிடவேண்டும்.
  16.  தேசிய கலைத்திட்டம் அரசியல் சாசனத்தின் குறிக்கொளுக்குட்பட்டு அரசியல் சாசனம் வகுத்துள்ள விழுமியங்களை அடையும் விதமாக தேசிய கலைத்திட்டத்தினை சீரமைத்தல்.  நாட்டின் பன்முகத் தன்மையினைப் புரிந்துகொண்டு தாய்மொழியினை கற்கும் மொழியாகக் கொண்டு  கற்கும் விதமாகக் கலைத்திட்டத்தினை வடிவமைத்தல். எந்த ஒரு தனிப்பட்ட மொழியையும் நாடு முழுமையிலுமுள்ள குழந்தைகள் கற்கத் திணிக்காதிருத்தல். கல்வியில் மேற்கொள்ளப்படும் அனைத்து மத ரீதியான தலையீடுகளையும் எதிர்த்தல். குழந்தைகளின் விமரிசனபூர்வமான எண்ணங்களையும், பிரதிபலிப்புகளையும் உருவாக்கிகொள்ளும் திறனை வளர்ப்பதன் மூலம் வரலாற்றை இனம் சார்ந்ததாகப் பார்க்காமல் தரவுகள் சார்ந்ததாக பார்க்கும் பார்வையை வளர்த்தல்.அறிவியல் முறையினையும் அறிவியல் மனப்பான்மையினையும் குழந்தைகளிடையே வளர்த்தெடுத்தல். வயதுக்கேற்ற வகையில் செய்துபார்த்துக் கற்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தல்.
  17.  பள்ளிக் கல்விக்கும்  மேநிலைக் கல்விக்கும் இடையே இயற்கையான தொடர்புகளை நிறுவுதல். இதன் மூலம் இடைநிற்றலைக் குறைத்தல்
  18.  அதிகாரப் பரவலை உறுதிசெய்வதன் மூலம் நிர்வாகத்தினை நெகிழ்வானதாக்குதல்.
  19. புதிய கல்வித் தொழில்நுட்பம் அனைத்து மாணவர்களுக்கும் எளிதாகவும் இலவசமாகவும் கிடைப்பதை உறுதிசெய்தல்
  20. ஆசிரியர்கள் தொழில்சார் நிபுணர்களாகும் வண்ணம் ஆசிரியர் கல்வியை புணரமைத்தல்.
  21.  அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஜனநாயக உரிமைகளையும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள்  அதிகரிக்கப்படவேண்டும்
  22. மாணவர்களுக்குத் தரப்படும் மதிய உணவின் தரம் மேம்படுத்தப்பட்டு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் வரை மதிய உணவுத்திட்டம் விரிவாக்கப்படவேண்டும்
  23. சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பான கவனிப்பும் கல்வியும் கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும்.
  24. எழுத்தறிவின்மையை அகற்ற சமூகம் முழுமையும் பங்கேற்கும் எழுத்தறிவு இயக்க முயற்சிகளை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும்.
  25. மக்களின் வாழ்நாள் முழுமைக்குமான ஒரு விரிவான கல்விக்கான கொள்கையை உருவாக்குதல்.
  26.  கல்விக்கூடங்களை வழிநடத்துவதில் உள்ளூர் சமூகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஈடுபாட்டை உறுதிசெய்தல்.
  27. அரசின் அனைத்துவிதமான திட்டங்களையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை சமூகத் தணிக்கை செய்யும் முறைமையினை உருவாக்குதல்.

தமிழகத்தைப் பொறுத்தவரை

  • ஆசிரியர்களின் பணித்திறனை சீரழிக்கும், பள்ளிகளை இணைக்கும், ஆசிரியர்களை தரம் இறக்கும் சீர்திருத்த முயற்சிகளை உடனடியாக கைவிடுத்தல்.
  • கல்வித் துறையின் அனைத்துத் துறைகளும் கூடுதல் ஒருங்கிணைப்போடு செயலாற்றுதல்.
  • செயல்வழிக்கற்றல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டினை அதன் உண்மையான பொருளில் செயல்படுத்துதல்
  • ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு போன்ற வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அச்சமூட்டும் நடவடிக்கை இனியும் கூடாது.
  • பாடப்புத்தகங்களை வடிவமைப்பதில் மன வயதுக்கேற்ற வகையில் கருத்துத்திணிப்பில்லாமல் உருவாக்குதல்
  • பாடப்புத்தகங்களை கள அளவில் பரிசோதித்து வடிவமைத்தல்.
  • ஆசிரியர்களின் பணிச்சுமையைக் கணக்கில் கொண்டு திட்டங்களை படிப்படியாக அமல் படுத்துதல்.
  • உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உளவியல் ஆலோசகர்களை பகுதி நேரமாகவாவது பணியமர்த்துதல்.

—————————————————————————————————————————–

எங்கள் தேசம்

எல்லோருக்குமான தேசம்

ஜனவரி 2019

கடந்த ஆண்டு 2016 நவம்பர் முதல் எங்கள் தேசம் நிகழ்வுகள் தமிழகத்தில் பல்வேறு வடிவங்களில் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்றுள்ளன. ஒரு வருடம் என்ற அளவில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் முழுமை பெறாததால் அகில இந்திய அளவிலும் இந்நிகழ்வுகள் தொடர வேண்டிய தேவை இருப்பதால் 2019ல் இன்னும் சிறப்புடன் வீச்சுடன் எங்கள் தேசம் இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டும். எங்கள் தேசம் நிகழ்வின் பகுதிகளாக அறிவியல் தின உறுதிமொழி, ஆகஸ்ட் 20- அறிவியல் மனப்பான்மை தினம், “Ask Why” ஆகிய அகில இந்திய அளவிலான நிகழ்வுகள் சிறப்புடன் சென்றுள்ளது.

தேசம் தழுவிய இன்னுமொரு நிகழ்வு இப்பொழுது திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் உடன் பொது நிகழ்வாக இந்த நிகழ்வை கொண்டு செல்ல திட்டமிட வேண்டும். ஜனவரி 23  சுபாஸ் சந்திரபோஸ் பிறந்த தினம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 30 மகாத்மா காந்தி நினைவு தினம் ஆகிய தினங்களை நினைவு கூறும் விதமாக “Ask How” இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றும் மிக முக்கியமான கோசத்தை இந்நிகழ்வில் மிக வலிமையாகவும், பரவலாகவும் கொண்டு செல்ல திட்டமிட வேண்டும். ஜனவரி 23,26,30 ஆகிய தினங்களை அந்தந்த தினத்திற்குரிய சிறப்பம்சங்களோடு கொண்டு செல்ல வேண்டும்.

ஜனவரி 23 அன்றைய தினத்தில் பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றும் விசயங்களை முன்னிறுத்தும் நிகழ்வுகள் அமைத்திடலாம். குறிப்பாக மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கியமான நகரங்களில் ஒரு கருத்தரங்கை திட்டமிட வேண்டும். மாநிலம் முழுவதும் 50 கருத்தரங்குகள் நடத்தலாம். பொதுத்துறை தொழிற்சங்கங்கள் உடன் இணைந்து இந்நிகழ்ச்சியை திட்டமிடலாம். (LIC, BSNL, ரயில்வே, அஞ்சல் துறை, மத்திய மாநில அரசு தொழிற்சங்கங்கள்) குடியிருப்போர் சங்கங்கள், நல சங்கங்கள், முற்போக்கு அமைப்புகள், மகளிர் அமைப்புக்கள்  ஆகியவறையும் இணைத்துக் கொள்ளலாம். கருத்தரங்குடன் வேறு வடிவங்களையும் திட்டமிடலாம். அனைத்து மாவட்டங்களும் ஒரு நிகழ்ச்சியையாவது உறுதி செய்ய வேண்டும்.

ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த நிகழ்வுகளை திட்டமிடலாம். அரசியலமைப்பு பாதுகாப்பு, அரசிலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்தல் போன்ற அம்சங்களை முன்னிறுத்தும் நிகழ்வுகள் அமைக்கலாம். அரசியலமைப்பு பதாகைகளோடு ஊர்வலங்கள், சிறப்பு ஓட்டங்கள், சேர்ந்திசை நிகழ்வுகள், கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து பெரிய பேனர்கள் உருவாக்குதல், கையெழுத்து இயக்கங்கள், கடிதம் எழுதுதல், இந்திய வரைபடம் உருவாக்குதல் போன்ற நிகழ்வுகளை திட்டமிடலாம். மாவட்டத்தின் தன்மைக்கேற்ப திட்டமிடலாம். இன்னும் சிறப்பான நிகழ்வுகளையும் மாவட்டங்கள் உருவாக்கலாம்.

ஜனவரி 30 ஒற்றுமை, அகிம்சை, மதநல்லிணக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நிகழ்வுகளை திட்டமிடலாம். மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான போட்டிகள் நடத்திடலாம். மகாத்மாவின் அகிம்சை, மத நல்லிணக்கம், மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றைக் குறித்த உரையாடல்கள் நிகழ்த்தலாம்.

மேற்கண்ட நிகழ்வுகளுக்கான கருத்துத்தாள்கள் தயாராகிறது. மாவட்டங்கள் நாம் ஏற்கனவே அனுப்பிய எங்கள் தேசம் பவர்பாயிண்ட் மற்றும் போஸ்டர்களை இந்நிகழ்வுகளில் பயன்படுத்த வேண்டும். 10 செட் பவர்பாயிண்ட் மற்றும் போஸ்டர்கள் மின் அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. நாம் வெளியிட்ட எங்கள் தேசம் புத்தகங்கள் மற்றும் AIPSN வெளியிட்ட ஆங்கில புத்தகங்களும் கருத்துத்தாளாக பயன்படுத்தலாம்.

அன்புடன்

அ.அமலராஜன்                                எம்.எஸ்.முகமது பாதுசா

பொதுச்செயலர்                                மாநில ஒருங்கிணைப்பாளர்

—————————————————————————————————-
எங்கள் தேசம்
எல்லோருக்குமான தேசம்
ஜனவரி 2019
பெறுநர்
திருமிகு. மாவட்டச் செயலர், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
அன்புடையீர்,
வணக்கம்.
எங்கள் தேசம் நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திட நமது மாநில செயற்குழுவில்  திட்டமிட்டுள்ளோம். 2019 ஜனவரி 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெற்ற இராமேஸ்வரம் செயற்குழுவில்திரு.ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் கருத்துரை ஜனவரி 23,26,30 தேதிகளை மையமாகக் கொண்டத்தாக இருந்தது. மாவட்டங்கள் இதில் தீவிர கவனம் கொள்ள வேண்டும். வரும் ஜனவரி 23,26,30 தேதிகளை மிகச்சிறப்பாக திட்டமிடுங்கள். உள்ளூர் கருத்தாளர்களை பயன்படுத்துங்கள்.
சிறிய, பெரிய அளவிலானாலும் கண்டிப்பாக      ஜனவரி 23-30 தேதிகளில் நிகழ்வுகளை நடத்தி அறிக்கைகளை அனுப்புங்கள். வாட்ஸப், முகநூல், மின் அஞ்சல் மற்றும் பல்வேறு வகையிலான வலைதளங்களை பயன்படுத்துங்கள்.  அனைத்து மாவட்டங்களும் திட்டமிட்டுள்ள  நிகழ்ச்சியை உறுதி செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்
அ.அமலராஜன் பொதுச்செயலர்
எம்.எஸ்.முகமது பாதுசா
மாநில ஒருங்கிணைப்பாளர்

AIPSN news updates

Read the Statement by Kerala doctors

Read Press Note by AIPSN On the arrest of Jacob Vadakkanchery

A self-styled “natural healer” Jacob Vadakkanchery was recently arrested, in Kerala, for campaigning
against the use of a medicine, doxycycline at a time when the state is recovering from devastation, caused by unprecedented rain.

Some have criticized this move, as an infringement on his right to express his opinion
about this drug.

Such criticism is uncalled for since Jacob Vadakkanchery’s pronouncements and actions
have posed a threat to the government’s and many medical practitioners, who have voluntarily come forward to mitigate the health risks that Kerala’s population faces, in the wake of the recent rain and floods.

Continue reading