*இந்திய அரசு செய்ததும்,செய்யத் தவறியும் செய்ய வேண்டியதும்.* :

மக்கள் ஆரோக்கிய இயக்கம் மற்றும் அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை  (சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் மக்கள் ஆரோக்கிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சுந்தரராமன், இரகுனந்தன், சரோஜினி, மற்றும் சுலக்க்ஷனா நந்தி  உள்ளிட்ட முப்பது மருத்துவ நிபுணர்கள் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் தொற்று தொடர்பாக அலசி ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்கவும் மக்களுக்கு வேண்டியதை எடுத்துக் கூறவும் முடிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் வாராவாரம் அவர்கள் அறிக்கை வெளிவரும். 24.03.2020 தேதியிட்ட அறிக்கையின் சுருக்கம்) 

கரோனா கிருமியும் கணிதமும்

இதுவரை உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலில் மடிந்தவர்களின் எண்ணிக்கை 9,840. சீனாவில் சாலை விபத்தில் ஒவ்வொரு நாளும் 700 பேர் மடிகிறார்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் பாம்புக்கடிக்கு மட்டும் மரணிப்பவர்கள் சுமார் ஐம்பதாயிரம். அப்படி என்றால் ஏன் கரோனா வைரஸ் குறித்து உலகளாவிய பீதி? இலுமினாட்டிகளின் சதி, சந்தை மார்கெட் சரிவு செய்ய சீன பொருளதார யுத்தம், தனது பொருளாதார தோல்வியை மறைக்க தேவையற்ற பீதியை அரசு செய்கிறது, இயற்கையை மனிதன் வல்லுறுவு செய்வதற்கு பூமி தரும் தண்டனை என்றெல்லாம் பிதற்றல்கள் - சமூக வலைத்தளம் முழுவதும். மெய் தான் என்ன? ’நாவல் கரோனா’ தொற்றுகிருமி நூற்றில் வெறும் 1.4% தான் உயிரை குடித்துள்ளது. மற்ற நோய்கிருமிகளைப் பார்க்கும்போது கொஞ்சம் சாதுவான கிருமி தான். ’நாவல் கரோனா’ வைரஸை விட பன்மடங்கு ஆட்கொல்லி கிருமிகள் உள்ளன. உள்ளபடியே மருத்துவர்களும், மனிதாபிமானம் உள்ளவர்களும் ஏன் கரோனாவை கண்டு அஞ்சுகின்றனர்? இதை விளக்கிக்கொள்ள கொஞ்சம் கணிதம் தேவை.

TN Academicians appeal to the public on the eve of Elections 2019

Dear Friends, In a few weeks from now, we would elect the 17th Lok Sabha. This is an important duty that would determine our country's future and that of the “Idea of India”.We, as academics, work or have worked in institutions of research and learning. These institutions of learning and research are the places where different schools of thought have to contend, with freedom and without fear. In contrast, a climate of fear has been created in institutions of higher education that discourages questioning and critical thinking. *Vote for Constitutional Values, Diversity and Inclusive Society *Prevent Suicidal Increase of Economic Inequality *Vote for creating a Healthy, Rational and Scientific Tamil Nadu and India

People’s Manifesto on Literacy and Education of AIPSN and BGVS

Please see here in English, Hindi, Odiya, Tamil, Telegu the People's Manifesto on Literacy and Education of All India People's Science Network and Bharat Gyan Vigyan Samiti. AIPSN and BGVS have been doing an all India campaign by conducting Jan Shiksha Samvad (People's Education Dialogue) at village, Panchayat, Block and District level in 23 States of India. The State Level Samvad will be 10 th 14th April in State Capital of 23 States. Individuals and organisations are requested to endorse the Manifesto.

கல்விக்கான தேர்தல் கோரிக்கைகள்

தமிழகத்தைப் பொறுத்தவரை: ஆசிரியர்களின் பணித்திறனை சீரழிக்கும், பள்ளிகளை இணைக்கும், ஆசிரியர்களை தரம் இறக்கும் சீர்திருத்த முயற்சிகளை உடனடியாக கைவிடுத்தல். கல்வித் துறையின் அனைத்துத் துறைகளும் கூடுதல் ஒருங்கிணைப்போடு செயலாற்றுதல். செயல்வழிக்கற்றல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டினை அதன் உண்மையான பொருளில் செயல்படுத்துதல்ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு போன்ற வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அச்சமூட்டும் நடவடிக்கை இனியும் கூடாது. பாடப்புத்தகங்களை வடிவமைப்பதில் மன வயதுக்கேற்ற வகையில் கருத்துத்திணிப்பில்லாமல் உருவாக்குதல்பாடப்புத்தகங்களை கள அளவில் பரிசோதித்து வடிவமைத்தல்.